ஊட்டி 200-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும், சுற்றுலா பயணிகளை கவரவும் இந்தாண்டு கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தனியார் நிறுவனம் மூலம் ஊட்டி தீட்டுக்கள் மைதானத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடைபெறும். ஒருமுறை ஹெலிகாப்டரில் 6 பேர் செல்லலாம். அங்கிருந்து 30 முதல் 40 கிலோமீட்டர் தூரம், சுமார் 10 நிமிடம் வரை பயணம் இருக்கும்.விமான நிறுவன உத்தரவின் படி சுமார் 1000 அடி உயரம் வரை பறந்து ஊட்டி நகரை கண்டு ரசிக்கலாம்.
இதற்கான கட்டணம் ரூ.6000 முதல் ரூ.7000 வரை இருக்கும். ஆன்லைன் மூலம் முன் அனுமதி பெறலாம். அதே சமயத்தில் நேரில் தீட்டுக்கள் மைதானத்திற்கு வந்தும் அனுமதி வாங்கலாம். ஊட்டி கால நிலையை பொறுத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக முதல் கட்டமாக மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.