iPhone 14: ஐபோன் 14 மொபைலை வாங்க திட்டமிட்டு இருந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம் என்பதில் சந்நதிகமில்லை, ஐபோன் 14 தான் இந்த சீரிஸின் மிகவும் விலை மலிவான மொபைலாகும். ஆப்பிள் ஐபோன் 14 ஆனது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி பேனல் மற்றும் மெல்லிய பெசல்கள், பரந்த வண்ண காமட்டை கொண்டுள்ளது. மொபைலின் டிஸ்ப்ளே ஹெச்டிஆர்-ஐ ஆதரிக்கிறது மற்றும் மொபைல் 1200-நிட்ஸ் பிரகாசம் மற்றும் ஃபேஸ் ஐடி சென்சார்களுடன் வருகிறது. ஐபோன் 14 60Hzன் நிலையான புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. A15 பயோனிக் சிப் மூலம் ஐபோன் 14 மொபைல் இயக்கப்படுகிறது, இது 16-கோர் என்பியூ மற்றும் 5-கோர் கிராபிக்ஸ் செயலியைக் கொண்டுள்ளது. இந்த செயலி 4ஜிபி ரேம் மற்றும் மூன்று சேமிப்பு (256ஜிபி மற்றும் 512ஜிபி) ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 14 நிலையான ஐஓஎஸ் 16 வெர்ஷனை இயக்குகிறது. இணைப்புகளை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போன் 5ஜி, வைஃபை, டூயல் சிம், புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் சார்ஜ் செய்வதற்கான லைட்னிங் போர்ட் போன்றவற்றை கொண்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, ஐபோன் 14 ஆனது இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது, இதில் முதன்மை கேமரா 12எம்பி வைட்-ஆங்கிள் சென்சார், பெரிய f/1.5 துளை, சென்சார்-ஷிப்ட் ஓஐஎஸ் மற்றும் இரண்டாம் நிலை 12எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் ஷூட்டர் போன்றவற்றை கொண்டுள்ளது. மேலும் ஐபோன் 14-ன் வீடியோ தன்மையானது டால்பி விஷனுக்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஐபோனானது தற்போது ஈ-காமர்ஸ் தளங்களான அமேசான், பிளிப்கார்ட் மற்றும் விஜய் விற்பனையில் தள்ளுபடி விலையில் இன்னும் குறைவான விலைக்கு விற்கப்படுகிறது. ஈ-காமர்ஸ் இயங்குதளங்கள் ஐபோன் 14-க்கு பல விதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வாரி வழங்குகின்றன. இப்போது எந்த ஈ-காமர்ஸ் தளம் ஐபோன் 14க்கு சிறந்த சலுகைகளை வழங்குகிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
அமேசான்:
128 ஜிபி வேரியண்ட் ஐபோன் 14 மொபைலின் உண்மையான விலை ரூ.79,900 ஆகும், ஆனால் இதே மொபைல் அமேசானில் ரூ.66,900க்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. கூடுதலாக நீங்கள் வைத்திருக்கும் பழைய மொபைலை மாற்றி ஐபோன் 14-ஐ வாங்கினால் ரூ.19,950 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் உங்கள் பழைய மொபைலின் நிலையை பொறுத்து தள்ளுபடி செய்யப்படும்.
ப்ளிப்கார்ட்:
ப்ளிப்கார்ட்டில் 128 ஜிபி வேரியண்ட் ஐபோன் 14 மொபைல் ரூ.67,999க்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஐபோனை வாங்குவதன் மூலம் ரூ.1250 தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக நீங்கள் வைத்திருக்கும் பழைய மொபைலை மாற்றி ஐபோன் 14-ஐ வாங்கினால் ரூ. 29,000 வரை தள்ளுபடி பெறலாம். மேலும் உங்கள் பழைய மொபைலின் நிலையை பொறுத்து தள்ளுபடி செய்யப்படும்.
விஜய் சேல்ஸ்:
ரூ.79,900க்கு விற்கப்படும் 128 ஜிபி வேரியண்ட் ஐபோன் 14 மொபைல் விஜய் சேல்ஸ் விற்பனையில் ரூ.70,990க்கு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி மொபைலை வாங்குபவர்களுக்கு ரூ.4,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. நீங்கள் வைத்திருக்கும் பழைய மொபைலை மாற்றி ஐபோன் 14-ஐ வாங்கினால் ரூ.5000 தள்ளுபடி வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.3000 தள்ளுபடி செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட உங்களுக்கு ரூ. 20,910 வரை தள்ளுபடி வழங்கப்பட்டு இறுதியாக, ஐபோன் 14-ன் விலை ரூ. 58,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.