பலருக்கும் முடி கொட்டுதல், பொடுகு தொல்லை, இளநரை உட்பட பல்வேறு முடி தொடர்பான பிரச்சனைகள் காணப்படலாம்.
இதுதவிர வறண்ட முடியும் முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமாகும், முடி வறண்டு இருப்பதால் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
எனவே Hair Smootheningக்கு பலரும் அழகு நிலையங்களை நாடுவார்கள், ஆனால் வீட்டில் இருந்தபடியே Hair Smoothening செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு– 1
- சோள மாவு- 2 டீஸ்பூன்
- வாழைப்பழம்– 2 (பச்சை வாழைப்பழத்தை தவிர்த்து)
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும், இதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக்கொண்டால் பேஸ்ட் தயாராகிவிடும், இதை காட்டன் துணிக்கொண்டு நன்றாக சாறு பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்ததாக உருளைக்கிழங்கு சாறுடன், சோள மாவு சேர்த்து நன்றாக கலக்கவும், இதனை அடுப்பில் வைத்து மிதமாக சூடுபடுத்தும் போது க்ரீம் பதத்திற்கு வந்துவிடவும்.
சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும், அடுத்து வாழைப்பழத்தை துண்டுகளாக நறுக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக உருளைக்கிழங்கு க்ரீமுடன், வாழைப்பழத்தை சேர்த்துக்கொண்டால் Hair Smoothening Pack தயாராகிவிடும்.
எப்படி பயன்படுத்துவது?
தலைக்கு எண்ணெய் வைத்துவிட்டு நன்றாக சீவிக்கொள்ளவும், இரண்டு பகுதியாக முடியை பிரித்துவிட்டு, நாம் தயார் செய்துள்ள Hair Smoothening Packயை அப்ளை செய்து கொள்ளவும்.
ஒவ்வொரு பாகமாக இதை அப்ளை செய்துவிட்டு 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும், பின்னர் தண்ணீரில் முடியை அலசிவிட்டு ஷாம்பு போட்டு குளித்தால் முடி மென்மையாகிவிடுவதை கண்கூடாக பார்க்கலாம்.
சுமார் மூன்று நாட்களுக்கு முடியின் மென்மை நீடிக்கும், உங்களுக்கு எப்போதெல்லாம் முடி வறண்டுவிட்டதாக நினைத்தாலும் இதை செய்துவிட்டால் போதும்!!!!