Doha Diamond League: சீறிப்பாய்ந்த ஈட்டி.. 45 வினாடிகளில் 88.67 மீட்டர் தூரம்.. தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா!

Neeraj Chopra Wins Doha Diamond League: கத்தாரில் நடைபெறும் தோஹா டையமண்ட் லீக் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். ஈட்டி எரிதலில் 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்று தந்துள்ளார். தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அனைத்து தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளது. 

டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்ற நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். நேற்று (மே5, வெள்ளிக்கிழமை) தோஹா டயமண்ட் லீக் பட்டத்தை நீரஜ் சோப்ரா வென்றுள்ளார். 25 வயதான சோப்ரா கடந்த செப்டம்பரில் சுவிட்சர்லாந்தில் நடந்த 2022 டயமண்ட் லீக் பைனல்ஸ் கோப்பையை வென்றிருந்தார்

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பாராட்டு:
அவரது வெற்றிக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டு தெரிவித்துள்ளார். நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் 88.67 மீட்டர் தூரம் எறிந்து தோஹா டயமண்ட் லீக்கில் தனது திறமையை காட்டி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். நமது நாட்டை மீண்டும் பெருமைப்படுத்திய உண்மையான சாம்பியன். இந்த அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துகள் நீரஜ் எனப் பதிவிட்டுள்ளார்.

Neeraj Chopra wins

With a thunderous throw of 88.67m, he dominated the Doha Diamond League and brought glory home. A true champion who has made the nation proud again.

Congratulations Neeraj on this stupendous win  pic.twitter.com/WqtkG4EdNs

— Anurag Thakur (@ianuragthakur) May 5, 2023

முதல் முயற்சியிலேயே 88.67 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா:
தோஹா டயமண்ட் லீக்கில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளார் நீரஜ். கத்தாரின் தோஹாவில் நடைபெற்ற இந்த போட்டியில், நீரஜ் தனது முதல் முயற்சியிலேயே 88.67 மீட்டர் ஈட்டி எறிந்து அனைவரையும் பின்னுக்கு தள்ளினார். இந்த வெற்றியின் மூலம் நீரஜ், ஆண்டர்சன் பீட்டர்ஸிடம் பெற்ற முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார். சோப்ராவின் பெர்சனல் பெஸ்ட் 89.94 மீ. டயமண்ட் லீக் கூட்டத்தில் சோப்ராவின் இரண்டாவது வெற்றி இதுவாகும். கடந்த ஆண்டு லொசானில் நடந்த டயமண்ட் லீக் கூட்டத்தில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

இது மிகவும் கடினமான வெற்றி -நீரஜ் சோப்ரா
வெற்றிக்குப் பிறகு நீரஜ் சோப்ரா கூறியதாவது, இது மிகவும் கடினமான வெற்றி. ஆனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல தொடக்கம். இது அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சவாலாக இருந்தது. அற்புதமான சூழல் அது. இன்று சவாலாக இருந்தது. அடுத்த முறை சிறப்பாக செய்வேன். நிறைய பேர் எனக்கு ஆதரவாக வந்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றார். 

Neeraj Chopra wins  at the Wanda Diamond League in Doha on Friday with a throw of 88.67m
#IndianAthletics pic.twitter.com/6PP5thpcNR

— Athletics Federation of India (@afiindia) May 5, 2023

தோஹா டையமண்ட் லீக் தொடரில் நீரஜ் எடுத்த புள்ளி விவரங்கள்:
இந்த லீக்கில் ஈட்டி எறிதலில் நீரஜின் புள்ளி விவரங்கள் பற்றி பார்த்தால், அவர் தனது முதல் முயற்சியிலேயே 88.67 மீட்டர் ஈட்டியை எறிந்தார். இரண்டாவது முயற்சியில் நீரஜ் ஈட்டியை 86.04 மீட்டர் தூரம் எறிந்தார். மூன்றாவதாக 85.47 மீட்டர் தூரம். நான்காவது முயற்சியில் நீரஜ் தோல்வியடைந்தார். 5வது முயற்சியில் நீரஜ் 85.37 தூரம் ஈட்டியையும், 6வது முயற்சியில் 86.52 மீட்டர் தூரமும் ஈட்டி எறிந்தார்.

முதல் முறை – 88.67 மீட்டர் தூரம்.
இரண்டாவது முறை – 86.04 மீட்டர் தூரம்
மூன்றாவதாக முறை – 85.47 மீட்டர் தூரம்.
நான்காவது முறை – தோல்வி.
ஐந்தாவது முறை – 85.37 மீட்டர் தூரம்.
ஆறாவது முறை – 86.52 மீட்டர் தூரம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.