வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஜம்முவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று, பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே ஆகியோர் ஜம்முவில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். இதற்காக விமானம் மூலம் டில்லியில் இருந்து ராஜ்நாத் சிங், ஜம்மு கிளம்பி சென்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement