ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொலை!

ஜம்மு காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் நடந்த என்கவுண்ட்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் கர்ஹாம குன்ஜர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.

அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகளை சரணடைய கூறினர். ஆனால் பயங்கரவாதிகள் சரண்டைய மறுத்ததால், போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பயங்கரவாதி பலியானார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.