மன்னர் சார்லஸ் உட்பட பிரித்தானிய ராஜ குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு! ஒரு அலசல்


பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி லண்டன் மேயர் வரையில் மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றாலும் அது அவர்களின் பதவி காலம் முடியும் மட்டுந்தான். ஆனால் ஒரு மன்னருக்கு, அவர் பிறந்ததில் இருந்து ஆயுள் வரையில் மக்கள் வரிப்பணத்தில் இருந்து செலவு செய்யப்படுகிறது.

ராஜ குடும்பத்தின் வருவாய்

பொதுவாக பிரித்தானிய ராஜ குடும்பத்தின் வருவாய் மற்றும் நிதி தொடர்பான அனைத்து தரவுகளும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படுவதில்லை. இதுவரையான காலகட்டத்தில், ஆண்டு தோறும் அவர்களின் வருவாய் அதிகரித்தே காணப்படுவதுடன், ஒரு கட்டத்திலும் சரிவடைந்ததாக தரவுகள் இல்லை.

மன்னர் சார்லஸ் உட்பட பிரித்தானிய ராஜ குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு! ஒரு அலசல் | Total Royal Wealth Charles Coronation @getty

மட்டுமின்றி, பல தசாப்தங்களாக அவர்களின் பங்குகள் ஒரு ரகசிய ஷெல் நிறுவனம் ஊடாக நிர்வகிக்கப்படுவதுடன், அந்த நிறுவனமானது தேசிய வெளிப்படைத்தன்மை சட்டத்திலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ராஜ குடும்பத்தின் உயில்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படாமல் ரகசியம் காக்கப்படுகிறது.
பிரித்தானிய ராஜ குடும்பம் மிகப்பெரிய செல்வந்தர்கள் என்பது ஊரறிந்த ரகசியம் என்றாலும், அவர்களின் சொத்து மதிப்பு தொடர்பில் பொதுமக்களிடையே கேள்விகள் மட்டுமே எஞ்சியுள்ளது.

சார்லஸ் மன்னரின் மொத்த சொத்துமதிப்பு குறித்து எழுப்பியுள்ள கேள்விக்கு எப்போதும் அரண்மனை அதிகாரிகள் ஒரே பதிலை அளித்து வருவதாகவும், தற்போது வேலை இருக்கிறது, அடுத்த வாரம் கண்டிப்பாக பதிலளிக்கிறோம் என்றே இது நாள் வரையில் கூறிவருவதாக பத்திரிகையாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு 86 மில்லியன் பவுண்டுகள்

ஆனால், குறைந்தபட்சம் 1.8 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு மன்னர் சார்லஸின் சொத்து மதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதே வரிசையில், ராஜ குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் போதுமான சொத்துக்களை திரட்டியுள்ளனர் எனவும், இருப்பினும் ஆண்டுக்கு 86 மில்லியன் பவுண்டுகள் பிரித்தானிய அரசாங்கம் ராஜ குடும்பத்திற்கு என அளித்து வருகிறது.

மன்னர் சார்லஸ் உட்பட பிரித்தானிய ராஜ குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு! ஒரு அலசல் | Total Royal Wealth Charles Coronation @EPA

மேலும், 1952 முதல் அவர்களின் பரம்பரை எஸ்டேட்டில் இருந்து ஆண்டு ஈவுத்தொகையாக பெருந்தொகையை பெற்று வந்துள்ள ராணியார், சமீபத்திய தரவுகளின்படி, குறைந்தது 1.2 பில்லியன் பவுண்டுகள் வரையில் ஈவுத்தொகையா ராஜ குடும்பம் பெற்று வருகிறது என்றே தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, 1849ல் அப்போதைய லாகூர் நகரில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட வைரங்கள், மாணிக்கங்கள், முத்துக்கள் மற்றும் மரகதங்கள் அனைத்தும் விக்டோரியா ராணியிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.