மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா: பின் வரிசைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி


 மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹரிக்கு மூன்றாம் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா

பிரித்தானியாவின் மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூட்டிக் கொள்ள இருக்கிறார், இந்த முடிசூட்டி விழாவிற்காக சுமார் 2000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணிக்கு மன்னர் சார்லஸ் பிரித்தானிய அரசராக முடிசூட்டிக் கொள்கிறார், அவருடன் அவரது மனைவியும் பிரித்தானியாவின் ராணியாக முடிசூட்டிக் கொள்ள இருக்கிறார்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா: பின் வரிசைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Seated In 3Rd Row In King CoronationPixels

தனியாக பிரித்தானியா வந்த இளவரசர் ஹரி

இதற்கிடையில் முடிசூட்டு விழாவிற்காக மன்னர் சார்லஸின் இளைய மகன் டியூக் ஆஃப் சசெக்ஸ் நேற்று பிரித்தானியாவிற்கு தனியார் விமானம் மூலம் வந்து இறங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே சமயம் முடிசூட்டு விழாவிற்கு இளவரசர் ஹரியுடன் அவரது மனைவி மேகன் வரவில்லை என்றும், இளவரசர் ஹரி மட்டுமே தனியாக வந்து இருப்பதாகவும், இளவரசி மேகன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் அவர்களது குழந்தைகளை கவனித்து கொள்ளும் பொருட்டு அங்கே இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா: பின் வரிசைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Seated In 3Rd Row In King CoronationTheSun

பின் வரிசைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி

இளவரசர் ஹரி அரச பொறுப்புகளை துறந்து தனியாக அமெரிக்காவில் வசித்து வருவதுடன், சமீபத்தில் அரச குடும்பத்திற்கு எதிராக அவர் வெளியிட்ட “ஸ்பேர்” புத்தகம் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் ஆகியவை அரச குடும்பம் மத்தியில் பெரும் மனவருத்ததை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெறும் முடிசூட்டு விழாவில், இளவரசர் ஹரிக்கு மூன்றாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழா: பின் வரிசைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி | Prince Harry Seated In 3Rd Row In King CoronationSkyNews

அவர் இளவரசி  யூஜெனியின் கணவர் ஜாக் ப்ரூக்ஸ்பேங்க் மற்றும் இளவரசி அலெக்ஸாண்ட்ரா ஆகியோரின் இடையே அமர்ந்திருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்வரிசையில் அரசு சேவை பணிபுரியும் மூத்த அரச குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிக்கை ஒன்றில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.