பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

இலங்கையின் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மட் சப்தார் கான் அவர்களின் கிழக்குக்கான சுற்றுப்பயணத்தின் போது புதன்கிழமை (ஏப்ரல் 26) மதுருஓயா இராணுவப் பயிற்சி பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியை இராணுவப் பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்களால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், அதன் பாடத்திட்டம் மற்றும் இராணுவப் பயிற்சி பாடசாலையின் பயிற்சிகளில் வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகின்றார்கள் என்பது தொடர்பான விவரத்தை விரிவுபடுத்துவதற்கு முன் வளாகத்தைச் சுற்றி பார்வையிட்டார்.

சந்திப்பின் முடிவில், வருகை தந்த பாதுகாப்பு ஆலோசகருக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாகவும், அவரின் வருகையின் நிமித்தமும் நினைவு சின்னம் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.