புதுடில்லி, ரயில் டிக்கெட் பரிசோதகரின் ஆடையில், கேமரா பொருத்தும் நடைமுறை முதன்முறையாக மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய ரயில்வே மார்க்கத்தில், டிக்கெட் பரிசோதகர் ஒருவர் பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சமீபத்தில் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார்.
ரயில் பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகர் பயணியரிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் அடிக்கடி புகார் வருகிறது.
இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக, டிக்கெட் பரிசோதகர்களின் மேலாடையில் கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
முதல்கட்டமாக, மஹாராஷ்டிராவின் மும்பை மண்டலத்தில் உள்ள டிக்கெட் பரிசோதகர் ஆடையில் கேமரா பொருத்தப்பட்டு, சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டது.
இதற்காக, தலா 9,000 ரூபாய் மதிப்பில் 50 கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களில் 20 மணி நேர காட்சிகளை பதிவு செய்து வைக்க முடியும். ‘இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், இது நாடு முழுதும் உள்ள ரயில்களில் அமலுக்கு வரும்’ என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement