மும்பை : நடிகர் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் கஜினி.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இந்தியிலும் ரீமேக்கானது. அதில் நடிகர் அமீர்கான் நடித்திருந்தார்.
அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா படம் படுதோல்வியை அடைந்துள்ளது.
விரைவில் துவங்கும் கஜினி 2 படம் : நடிகர்கள் சூர்யா, அசின், நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் கஜினி. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் திரைக்கதை, காட்சி அமைப்புகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சூர்யாவிற்கு சிறப்பான கேரியரை கொடுத்த படங்களில் கஜினியும் ஒன்று. இந்தப் படத்தில் தனது சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார் சூர்யா.
ஸ்மார்ட்டான சூர்யாவாக ரசிகைகளை கவர்ந்த அதே வேளையில் ஸ்பிலிட் பர்சனாலிட்டியாகவும் நடந்ததை மறந்து பரிதவிக்கும் கேரக்டரிலும் பின்னி பெடலெடுத்திருப்பார் சூர்யா. தனக்கு இருக்கும் குறைபாடுடனேயே வில்லன்களையும் பழிவாங்கும் இந்தப் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தை அவர்கள் கொண்டாடினர். மொட்டை அடித்துக் கொண்டு ஆனால் சிறப்பான உடல்கட்டுடன் சூர்யா இந்தப் படத்தில் மாஸ் காட்டியிருப்பார்.
இந்தப் படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியிலும் பிரபல நடிகர் அமீர்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியிலும் இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருந்தனர். தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்துவரும் அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் லால் சிங் சத்தா படம் வெளியானது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் படுதோல்வியை சந்தித்தது.
இதையடுத்து படங்களில் நடிக்காமல் உள்ளார் அமீர்கான். இந்நிலையில் கஜினி 2 படத்தில் நடிக்க அவர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திரைக்கதையை உருவாக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவிற்கு கஜினி படம் கைக்கொடுத்தது போலவே அமீர்கானுக்கும் இந்தப் படம் மிகச்சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், அவர் அடுத்ததாக இந்தப் படத்தை கையிலெடுக்க உள்ளது சிறப்பான முடிவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சூர்யாவிற்கு அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து வருகின்றன. அடுத்தடுத்து சுதா கொங்கரா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவர் அடுத்ததாக கஜினி 2 படத்தில் கவனம் செலுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாலிவுட்டில் இந்தப் படம் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழிலும் இந்தப் படம் எடுக்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.