ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணை தேள் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை கொட்டிய தேள்
கடந்த ஏப்ரல் 23ம் தேதி நாக்பூர்-மும்பை ஏர்-இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண்ணை தேள் கொட்டியது. தேள் கொட்டியதில் அப்பெண் வலியால் அலறி கத்தியுள்ளார்.
விமானப் பயணத்தின் போது பயணிகள் தேள் கொட்டுவது மிகவும் அரிது. விமானத்தின் போது பெண் பயணிக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கிய உடனேயே அப்பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
@ani_digital
ஏர் இந்தியா அதிகாரிகள் பயணிகளுடன் மருத்துவமனைக்குச் சென்று, டாக்டர்களால் டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை அவருடனேயே இருந்தனர்.
இதனையடுத்து, ஏர் இந்தியாவின் பொறியியல் குழுவினர் விமானத்தை முழுவதுமாக சோதனை செய்தனர்.
அப்போது, விமானத்தில் அப்பெண்ணை கடித்தத் தேளைக் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, விமானம் முழுவதும் புகைமூட்டினர்.
பயணிகளுக்கு ஏற்பட்ட வேதனை மற்றும் சிரமத்திற்கு ஏர் இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது. தற்போது அப்பெண் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக ஏர் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.