தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு ..!!

சுதிப்தோ சென் இயக்கியுள்ள படம் தி கேரளா ஸ்டோரி.அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரில், கேரளாவில் மதமாற்றம் செய்யப்பட்ட 32 ஆயிரம் பெண்களின் கதை என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் படம் உருவாக்கப்பட்டு இருப்பதாகக் கூறி கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் நீட்சியாக தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, படம் கேரளாவில் வெளியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் ஏன் தடை விதிக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் வாதிட்டார். மேலும், தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்த நிலையில், அதனை எதிர்த்து தான் வழக்கு தொடர முடியும் என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து, கேரளாவில் மத மாற்றம் நடைபெறாத நிலையில், தவறான தகவலை வைத்து படம் எடுக்கப்பட்டதாக மனுதாரரர் கூறினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக இயக்குநர் எப்படி முடிவுக்கு வந்தார் என்று கேள்வி எழுப்பினர். மேலும், படம் வெளியாக கூடிய இறுதி கட்டத்தில் ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள் என்றும் அவர்கள் வினவினர். இவ்வழக்கு கேரளா உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ள போது, நாங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று திரையரங்குகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.”இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சீமான் கூறியதாவது: மதம் இருந்தால் போதும் என்று பா.ஜ.க. நினைக்கிறது. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனநிலையை அவர்கள் உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் சர்ச்சைகள் நிறைந்த படங்கள் திரையிடப்படுகின்றன. கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், தி கேரளா ஸ்டோரி படம் வெளிவந்து உள்ளது. 2024 மக்களவை தேர்தலுக்காக திப்பு என்ற படம் தயாராகி கொண்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது ’தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் பயங்கரவாதிகளின் கோர முகத்தை கிழித்தெறியும் வகையில் உள்ளது. தீவிரவாதிகளை பற்றி கூறும் படத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கிக்காக எதிர்க்கின்றன என கர்நாடக தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.