சென்னை : நகைச்சுவை நடிகர் மனோபாலா இறுதிச்சடங்கில் கமல் கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது என்று பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.
நடிகர் மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 3 ஆம் தேதி சென்னையில் உயிரிழந்தார்.
அவரது மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மனோ பாலா : தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உடலநலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 69. கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் வீட்டில் காலமானார். இவரது இறுதிச்சடங்கில் விஜய் மட்டும் கலந்து கொண்ட நிலையில், ரஜினிகாந்த், கமல், தனுஷ், சிம்பு கலந்து கொள்ளாதது பேசுபொருளாகி உள்ளது.
எதிரியே இல்லை : இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வலைப்பேச்சு அந்தணன், நடிகர் மனோபாலாவின் மரணச்செய்தி கேட்டு மனம் உடைந்துபோனேன், மனோபாலா அனைவருக்கும் பரீச்சியமானவர், அனைவரிடத்தில் நண்பராக பழகக்கூடியவர். அவருக்கு எதிரியே என்றேயாரும் இல்லை, நடிகர் சங்கத் தேர்தல், இயக்குநர் சங்கத் தேர்தல் என பல தேர்தலில் நின்று இருக்கிறார். ஆனால், எதிரணியினரும் நேசிக்கக்கூடிய ஒருவராக இருந்தவர் மனோபாலா.
இப்படி செய்து இருக்கக்கூடாது : அனைவர் இடத்திலும் அன்பாக பழகிய மனோபாலாவின் இறுதிச்சடங்கில் ரஜினி,கமல்,தனுஷ், சிம்பு கலந்து கொள்ளாதது வருத்தம் தான், கமலுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர் மனோபாலா. சிறுவயதில் கமல் பல படங்களில் நடித்திருந்தாலும், நடனத்தில் மீது இருந்த ஆர்வத்தால் டான்ஸ் மாஸ்டராக மாறிவிட்டார். அப்போது மனோபாலா கமலுக்கு அட்வைஸ் கொடுத்து அவரை நடிக்கவைத்தவர் மனோபாலாத்தான். இவரின் இறுதிச்சடங்கில் கமல் நிச்சயம் கலந்து கொண்டு இருக்க வேண்டும். கமல் இப்படி செய்து இருக்கக்கூடாது.
நல்ல மனிதர் : சினிமாவில் மீது இருந்த காதலால் உண்டியலை உடைத்து ஊரைவிட்டு ஓடிவந்தவர் மனோபாலா. அப்பாவின் பிடிவாதத்தால் ஓவியக்கல்லூரில் படித்துவிட்டு ஓவியராக வெளியில் வந்தார். இருந்தாலும் சினிமாவின் மீது இவருக்கு இருந்த காதலால் மீண்டும் சினிமாவில் முயற்சி செய்து திரைத்துறையில் நுழைந்தார். நடிகர் மனோபாலா இயக்குநராக மட்டுமில்லாமல் நல்ல நடிகராகவும் இருந்து அவருக்கான பங்கை சிறப்பாக செய்து இருக்கிறார் என்றார் வலைப்பேச்சு அந்தணன்.