திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கொல்லம் அருகே கடைக்கல்லில் குடும்பத்தகராறில் கணவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த மனைவி போலீசில் சரணடைந்தார்.
கடைக்கல்லைச் சேர்ந்தவர் சாஜூ 44. இவரது மனைவி பிரியங்கா 38. இரு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன், மனைவி பிரிந்தனர்.
பிரியங்கா குழந்தைகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டுக்கு அடிக்கடி செல்லும் சாஜூ தகராறு செய்து வந்தார். இது தொடர்பாக கடைக்கல் போலீசில் புகார் செய்ததன்பேரில் சாஜூவை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
நேற்று முன் தினம் சாஜூ மீண்டும் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த மண் வெட்டியால் தலையில் தாக்கினார். இதில் சாஜூ சம்பவயிடத்தில் இறந்தார். பின் பிரியங்கா கடைக்கல் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement