வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: தனது குடியிருப்புக்கான 80 ஆண்டு கால சட்ட போராட்டத்தில் 93 வயது பாட்டிக்கு சாதகமான தீர்ப்பை வழங்கி உள்ளது மும்பை நீதிமன்றம்
தெற்கு மும்பை பகுதியை சேர்ந்த 500 ச.அடி மற்றும் 600 ச.அடி அளவுகளை கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளது. மார்ச் 28 ம் தேதி 1942 ம் ஆண்டு இந்திய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தனியார் சொத்துக்களை கைப்பற்றும் விதமாக மேற்கண்ட கட்டடம் அரசிடம் ஒப்படைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை எதிர்த்து அதில் வசித்துவந்த பெண்ணான டிசோசா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
சுமார் 80 ஆண்டுகளாக இது குறித்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது. நீதிபதிகள் தனுகா மற்றும் சத்தாயே ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. சொத்துக்கள் தற்போது முன்னாள் அரசு அதிகாரியின் சட்டபூர்வ வாரிசுகளால் ஆக்கிமிக்கப்பட்டுள்ளதாக கூறிப்பட்டது.
தொடர்ந்து டிசோசா தனது மனுவில் ஜூலை 1946 கோரிக்கை நீக்க உத்தரவை அமல்படுத்தவும், அடுக்குமாடி குடியிருப்பை தன்னிடம் ஒப்படைக்கவும் மகாராஷ்டிரா அரசு மற்றும் மும்பை கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
தொடர்ந்து நீதிபதிகள் கடந்த 4 ம் தேதி பிறப்பித்த உத்தரவில் இப்போது வசிப்பவர்களிடமிருந்து எட்டு வாரங்களுக்குள் நிலத்தை கைப்பற்றவும், அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டும் என மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து கடந்த 80 ஆண்டுகாலமாக நடைபெற்று வந்த சட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement