கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் இந்தப்படம் குறித்து வெளியாகும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பை கிளப்பி வருகிறது. இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து கெளதம் மேனன் அளித்துள்ள தகவல் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்த ஜனவரியில் விஜய் நடிப்பில் வாரிசு படம் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழியில் வம்சி பைடிபள்ளி இயக்கியிருந்த இந்தப்படம் பொங்கல் ரிலீசாக வெளியானது. அதே போல் அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசானதால் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல் கொண்டாடினார்கள்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பொங்கலுக்கு வெளியான வாரிசு, துணிவு இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். வாரிசு படம் போல் இல்லாமல் முழுக்க ஆக்ஷன் ஜானரில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
‘மாஸ்டர்’ படம் ஒருசில நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்த நிலையில் ‘லியோ’ படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் உருவாக்கி வருகிறார் லோகேஷ். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. விரைவில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘லியோ’ படம் குறித்து இயக்குனர் கெளதம் மேனன் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Vidaamuyarchi: மகிழ் திருமேனி போட்டுள்ள பக்கா பிளான்: சம்பவத்திற்கு தயாராகும் ஏகே.!
அதில், ‘விக்ரம்’ படத்தில் லோகேஷ் நடிக்க கேட்ட போது என்னால் நடிக்க முடியவில்லை. ‘லியோ’ படத்தில் ஒப்பந்தம் ஆனவுடன் என்னிடம் பேசினார். இந்தப்படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர் இருப்பதாகவும், அதில் நான் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்றும் தன்னுடைய டீம் கூறியதாகவும் லோகேஷ் கூறினார். அதன்பின் என் கேரக்டரை அவர் விளக்கிய போது நான் ஆச்சரியமடைந்தேன்.
‘லியோ’ படத்தில் விஜய்யுடனே ட்ராவல் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளேன். லோகேஷின் டைரக்ஷன் ஸ்டைல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் இந்தப்படத்தில் நடித்தது மகிழ்ச்சியாகவுள்ளது என தெரிவித்துள்ளார். ‘லியோ’ படத்தில் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத், மிஷ்கின், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோர் விஜய்யுடன் இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
A. R. Rahman: ‘தி கேரளா ஸ்டோரி’.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த பலே காரியம்: தீயாய் பரவும் வீடியோ.!