தமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களில் 25 லட்சம் குழந்தைகள் பயில்கின்றனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தில் இணை உணவும், மாநில அரசு திட்டத்தில் மதிய உணவும் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லுாரிகளுக்கு போல் தங்களுக்கும் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என கடந்த மாதத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில்,மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது