மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது
பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கு வாழ்த்துக்களைக் கூறிய ஜனாதிபதி,
அவருடன் சுமுகமாகக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு
இம்மாநாட்டில் இளையோரின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலான கல்வி
மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்குப் பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை
முன்னெடுக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உரையில்
வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் எனவும்
ஜனாதிபதி கோரியுள்ளார்.