கர்நாடகா சட்டமன்ற தேர்தல்: பிரதமருக்கு டெல்லியில வேலை இல்லையா.? – நோஸ் கட் செய்த தாத்தா.!

பிரதமர் மோடிக்கு டெல்லியில் வேலையே இல்லையா என கர்நாடாக தாத்தா ஒருவர் பேசும் வீடியோ வைரலாகிவருகிறது.

கர்நாடகாவில் வருகிற புதன்கிழமை (10ம் தேதி) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து 13ம் தேதி சனிக்கிழமை அன்று முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களில் வெற்றி பெரும் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், மாநிலத்தில் பிரச்சாரம் கடைசி நிலையை எட்டியுள்ளது. பிரதமர் மோடி இன்று 26 கிலோமீட்டர் Roadshow நடத்தினார்.

வாய்ப்புகிடைக்கும் போதெல்லாம் உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலத்தில் பிரச்சாரம் மற்றும் பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். பாஜக தேசிய தலைவர்கள், ஒன்றிய பாஜக அமைச்சர்கள் தீவிரமாக களப்பணி ஆற்றிவருகின்றனர். பாஜக சமீபத்தில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையும் கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலிண்டர் விலையை கடுமையாக ஏற்றி விட்டு ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது பேசு பொருளானது.

அதேபோல் இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு தான் அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக பல்வேறு கருத்துக் கணிப்புகள் கணித்துள்ளன. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 132 முதல் 140 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி, அதிக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. அதேபோல் 150 இடங்களில் வெல்வதையே இலக்காக கொண்டு ராகுல் காந்தி களத்தில் செயல்பட்டு வருகிறார். 120 எம்எல்ஏக்களை பெற்றால், அவர்களில் சிலரை விலைக்கு வாங்கி மீண்டும் பாஜக ஆட்சி அமைத்துவிடும் என ராகுல் காந்தி தெளிவாக பேசி வருகிறார்.

இப்படியாக கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் சூழலில் பிரதமர் மோடி குறித்து, அந்த மாநிலத்தைச் சேர்ந்த தாத்தா ஒருவர் பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தாத்தா பேசும்போது, ‘‘1947ல் இருந்தே அரசியல்வாதிகளை பார்த்து வருகிறேன். ஜவஹர்கலால் நேரு, இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட பிரதமர்களை இங்கு பார்த்திருக்கிறேன். அவர்கள் அடிக்கடி நமது பெங்களுவிற்கு வரமாட்டார்கள். அவசியமான காரியங்களுக்கு மட்டும் தான் பெங்களுருவிற்கு வருவார்கள்.

ஆனால் இப்போது உள்ள பிரதமர் வாரத்தில் இரண்டு கட்டாயமாக இங்கு வந்துவிடுகிறார். அவர் வரும் போது அதிக மக்கள் பணம் செலவு செய்யப்படுகிறது. பேனர்களால் பொதுமக்கள், குழந்தைகள் அவதியுருகிறார்கள். இந்த டிராஃபிக் பிரச்சனை வேறு. முந்தைய எந்த பிரதமரும் இப்படி செய்ததை நான் பார்த்ததில்லை.

பிரதமர் மோடி வரும்போதெல்லாம் அதிக செலவு செய்யப்படுகிறது. இதெல்லாம் யாருடைய பணம், நம் பணம் தானே. ஒரு நாளைக்கு எத்தனை முறை பிரதமர் இங்கு வரலாம்.? தேர்தல் என்றால் ஓரிண்டு நாட்கள் வந்து விட்டு செல்லலாம். ஆனால் இவர் இந்த வாரத்தில் இரண்டு நாள் வருகிறார், அடுத்த வாரத்தில் இரண்டு நாள் வருகிறார், அதற்கடுத்த வாரத்திலும் வருகிறார். பிரதமருக்கு டெல்லியில் வேற வேலை இல்லையா.? வந்தால் இரண்டுநாள் தங்கி பேசி விட்டு செல்ல வேண்டும்.. அதைவிடுத்து ஹெலிகாப்டரில் ஓயாமால் வருவதால் மக்கள் பணம் செலவளிக்கப்படுகிறது’’ என அந்த தாத்தா பேசிய வீடியோ வைரலாகிவறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.