டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குருப்-1 முதன்மை எழுத்துத்தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் மே 8 முதல் 16ம் தேதி வரை (அரசு வேலை நாட்களில்) தங்கள் அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து அரசு இ-சேவை மையங்கள் மூலமாக தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
முதன்மைத் தேர்வுக்கானதேர்வு கட்டணம் ரூ.200ஐ மே 15 அல்லது அதற்கு முன் செலுத்த வேண்டும். தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே சான்றிதழ்களை பதிவேற்ற முடியும்.
விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களை பதிவேற்றவில்லை எனில் அவ்விண்ணப்பதாரர்களுக்கு முதன்மை எழுத்து தேர்வில் கலந்துகொள்ள விருப்பமில்லை எனக்கருதி அவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.