பாஜகவின் ஊழல் பட்டியல் என விளம்பரம் வெளியிட்ட காங்கிரஸ் – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

புதுடெல்லி,

பாஜகவின் ஊழல் பட்டியல் என்று பத்திரிகைகளில் காங்கிரஸ் வெளியிட்ட விளம்பரம் தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாளை மாலைக்குள் அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக அளித்த புகாரின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் கர்நாடகாவில் 2019 முதல் 2023 வரையிலான “ஊழல் விகிதங்கள்” என பட்டியலிடப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டது. மேலும் பாஜக அரசாங்கத்தை “சிக்கல் இயந்திரம்” என்று குறிப்பிட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் “அதற்கான ஆதாரங்களைத் தெரிவிக்கவும், நீங்கள் வழங்கிய விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள், வேலைகள் மற்றும் கமிஷன் வகைகள் ஆகியவற்றின் விகிதங்களுக்கான சான்றுகள் மற்றும் ஏதேனும் விளக்கம் இருந்தால் அதனை மே 7, 2023 அன்று மாலை 7 மணிக்குள் பொது வெளியில் வெளியிட வேண்டும்” என்று கூறியுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.