சென்னை : விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதன் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன.
இந்தத் தொடரில் கோபி, பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்களில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இவர்களை சுற்றியே கதைக்களம் காணப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் தொடரிலிருந்து தான் விலகவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு கோபியாக நடித்துவரும் சதீஷ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் ஷாக்கானார்கள்.
கோபியாக தொடரும் நடிகர் சதீஷ் :விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவரும் தொடர்களில் ஒன்றாக உள்ளது. விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாக்கியலட்சுமி, டிஆர்பியிலும் முன்னணி வகித்து வருகிறது. ரசிகர்களின் மனம்கவர்ந்த இந்தத் தொடர் பல எபிசோட்களை கடந்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது. இந்தத் தொடரின் கோபி -பாக்கியா மற்றும் ராதிகா கேரக்டர்கள் லீட் கேரக்டர்களாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
கோபியாக சதீஷ், பாக்கியாவாக சுசித்ரா மற்றும் ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். இவர்களை மையமாக கொண்டு மற்ற கேரக்டர்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடரில் கோபியாக நடித்துவருகிறார் நடிகர் சதீஷ். இவர் முன்னதாக சில சீரியல்கள், படங்களில் நடித்திருந்தாலும் பாக்கியலட்சுமி தொடர் இவருக்கு மிகவும் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்தக் கேரக்டருக்கு இவர்தான் பொருத்தம் என்று கூறும் வகையில் இந்த கேரக்டர் அமைந்துள்ளது.
தான் ஆசைப்படும் வாழ்க்கைக்காக திருமணமான பிள்ளைகளுடன் தான் வாழ்ந்துவந்த வாழ்க்கையை உதறித்தள்ளும் கோபி, தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக ராதிகாவை திருமணம் செய்துக் கொள்கிறார். தான் விரும்பிய கனவு வாழ்க்கை தனக்கு கிடைக்கும் என்ற நப்பாசையில் இவர் எடுக்கும் இந்த முடிவு இவருக்கே ஆப்பாக முடிகிறது. ராதிகாவுடன் நித்தம் ஒரு சண்டை என பொழுது கழிகிறது.
இதையடுத்து விரக்தியடையும் கோபி, குடி பழக்கத்திற்கு ஆளாவதாக கதைக்களம் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், தன்னுடைய வீட்டில் ஒருநாள் அவர் தங்க நேர்கிறது. இதையடுத்து அவரது இரண்டாவது மனைவி ராதிகாவும் அவர்கள் வீட்டுடன் வந்து தங்குகிறார். இதனால் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கின்றன. தொடர்ந்து தன்னுடைய குடுமபத்தினரின் எதிர்ப்புடன் ராதிகாவின் நச்சரிப்பையும் தாங்க முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார் கோபி.

இவ்வாறாக இந்தக் கேரக்டரை ரசிகர்கள் திட்டித் தீர்க்கவும் பச்சாதாபப்படும்படியாகவும் பல்வேறு கோணங்களில் சிறப்பாக கொண்டு சென்று வருகிறார் சதீஷ். இதனிடையே, இந்த தொடரிலிருந்து தான் விலக உள்ளதாகவும் இன்னும் சில வாரங்களே தான் தொடரில் நடிப்பேன் என்று சில வாரங்களுக்கு முன்பு சதீஷ் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அந்த கேரக்டரில் சதீஷ்தான் பொருத்தமாக இருப்பார் என்றும் சீரியலிலிருந்து விலக வேண்டாம் என்றும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், தற்போது சதீஷ் இந்தத் தொடரிலிருந்து வெளியேறாமல் தொடர்ந்து நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கோபி கேரக்டரை சிறப்பான வகையில் சதீஷ் கொண்டு செல்வார் என்று ரசிகர்கள் தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பாக்கியலட்சுமி தொடரின் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை காணவும் ரசிகர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.