கல்விக்காக நான் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன்.. கிழிந்த சட்டையுடன் விழாவில் பங்கேற்ற விஷால்!

சென்னை : நடிகர் விஷால் கல்விக்காக நான் பிச்சை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்று நடிகர் விஷால் விழா ஒன்றில் பேசி உள்ளார்.

சென்னை சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தில் சென்னையில் ஒரு கிராம விழா என்ற நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் மனோ பாலாவிற்கு மௌன அஞ்சலியும் செலுத்தினார்.

சென்னையில் ஒரு கிராமம் : இந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால், ஒரு கிராம விழா நிகழ்ச்சியை சிட்டியிலும், ஒவ்வொரு பள்ளியிலும் நடத்த வேண்டும். ஏன் என்றால், கிராமத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைத்து நமக்கு சோறு போடுகிறார்கள். அவர்களின் கஷ்டம் நகரத்தில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை.

பிச்சை எடுக்கிறேன் : விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன். பள்ளி,கல்லூரி ஈவன்ட்டுக்கு போனா, என் முதல் வேலையே இந்த பிச்சை எடுக்கிறேன். கல்வியால் எப்போதும் இந்த உலகத்தை ஆள முடியும், அந்த கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது. எனக்காக இல்லை, படிக்க முடியாத எத்தனையோ மாணவ, மாணவியர்களுக்காக நான் இதை தயங்காமல் செய்து வருகிறேன்.

உதவிசெய்யுகள் : விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும் என்பது உண்மையானது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அனைவரும் உங்களால் முடிந்தால் ஒரு ரூபாய் கொடுக்க விரும்பினால் உங்களால் ஒரு விவசாயி குடும்பத்துக்கோ அல்லது ஒரு மாணவ, மாணவி படிப்பதற்காகவோ உதவ முடியும் என்றார்.

Actor Vishal emotional speech at chennaiyil oru gramam function

கிழிந்த சட்டை : இதையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சி மற்றும் மாட்டு வண்டி பயணம், வயலில் பெண்களுடன் இறங்கி நாற்று நட்டார். அப்போது விஷாலின் சட்டை கிழிந்ததால், அவரின் உதவியாளர் மாற்றுசட்டை கொடுத்தார். அதை வேண்டாம் என்று மறுத்த விஷால், இது விவசாயத்தால் கிழித்த சட்டை அப்படியே இருக்கட்டும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.