சேலம் அரசு மருத்துவமனைக்குள் கார் நிறுத்துவது தொடர்பான பிரச்சனையில் மயக்கவியல் மருத்துவருக்கு சொந்தமான காரின் டயரில் இருந்து காற்றை பிடுங்கி விட்டதோடு மிரட்டல் விடுத்ததாக இருதய அறுவைச் சிகிச்சைத்துறை தலைவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது..
சேலம் அரசு தலைமை மருத்துவ மனையில் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் பொன் ராஜராஜனின் கார் நிறுத்தும் இடத்தில் சம்பவத்தன்று இடம் காலியாக இருந்ததால் மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் மருத்துவர் பிரதீப் தனது காரை நிறுத்திச்சென்றுள்ளார்.
அப்போது காரில் அங்கு வந்த இருதய அறுவை சிகிச்சை துறை எச்.ஓ.டி பொன் ராஜராஜன் , அங்கிருந்த பிரதீப்புக்கு சொந்தமான காரின் டயரில் இருந்து காற்றை பிடுக்கி விட்டதோடு, தான் நிறுத்தும் இடத்தில் எப்படி காரை நிறுத்தலாம் என்று செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டு பிரதீப்பை மிரட்டியதாக கூறப்படுகின்றது
தனது காரில் காற்றை பிடுங்கி விட்டதோடு, மிரட்டல் விடுத்ததாக ஆடியோ ஆதாரத்துடன் மருத்துவர் பிரதீப் காவல் நிலையத்தில் பொன் ராஜராஜன் மீது புகார் அளித்துள்ளது குறிப்பிடதக்கது.