டெக்சாஸ் வணிக வளாகத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு! அலறியடித்து ஓடிய மக்கள்..அதிர்ச்சி வீடியோ


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கர துப்பாக்கிச்சூடு

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், பிற்பகல் 3.40 மணியளவில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

பல துப்பாக்கிகள் வெடித்த சத்தம் கேட்டதால் உள்ளே இருந்த மக்கள் பலர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் தற்போதைய தன்மை காரணமாக ஆலன் காவல்துறை எந்த விவரங்களையும் உறுதிப்படுத்தவில்லை, ஆனால் அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

பதற்றமடைந்த மக்கள்

கொலின் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் உள்ளூர் ஊடகங்களில் சிலர் பாதிக்கப்பட்டவர்கள் வணிக வளாகத்தில் இருந்ததாக தெரிவித்தார்.

டெக்சாஸ் வணிக வளாகத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு! அலறியடித்து ஓடிய மக்கள்..அதிர்ச்சி வீடியோ | Gun Shooting Texas Allen Outlet Mall Shock Video Daily Mail 

எனினும் அவர்களின் நிலைமைகள் குறித்த கூடுதல் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘நாங்கள் கான்வர்ஸ் ஸ்டோருக்கு வெளியே இருந்தோம், இதையெல்லாம் நாங்கள் இப்போது தான் கேட்கிறோம்’ எனவும், ‘நாங்கள் அனைத்தையும் இப்போது நிறுத்திவிட்டோம், எங்களுக்கு முன்னால் இருந்ததைப் போல தீப்பொறிகள் பறந்தன’ என தெரிவித்துள்ளனர்.

டெக்சாஸ் வணிக வளாகத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு! அலறியடித்து ஓடிய மக்கள்..அதிர்ச்சி வீடியோ | Gun Shooting Texas Allen Outlet Mall Shock Video Image: Sunnewsonline

கடந்த ஆண்டு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பாடசாலையில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.           

டெக்சாஸ் வணிக வளாகத்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு! அலறியடித்து ஓடிய மக்கள்..அதிர்ச்சி வீடியோ | Gun Shooting Texas Allen Outlet Mall Shock Video Image: AP Photo/LM Otero      



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.