லண்டன்: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஊர்வலத்தில், ‘இவர் என் ராஜா அல்ல’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. கோஷங்கள் எழுப்பியர்களை இங்கிலாந்து காவல்துறையினர் கைது செய்தனர். குடியரசு பிரச்சாரக் குழுவின் முக்கிய உறுப்பினர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அந்தக் குழுவின் தலைவர் கிரஹாம் ஸ்மித் உட்பட மொத்தம் ஆறு அமைப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டக்காரர்களிடம் இருந்த நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளை போலீசார் கைப்பற்றினர், மூன்றாம் சார்லஸ் மன்னர் முடிசூட்டப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இவ்வாறு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
முடியாட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள் மத்திய லண்டனின் வீதிகளில் இறங்கி, புதிதாக முடிசூட்டப்பட்ட பிரிட்டிஷ் மன்னரின் ஊர்வலம் செல்லும் வழியில் கூடி நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். 11,000 க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் கூட்டத்தில் இடையூறு ஏற்படாமல் தடுக்க பயன்படுத்தப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
There is something quite moving about the way crowd’s boos crescendo as Handel plays out from Westminster Abbey. It works. Well done all. pic.twitter.com/0Y9t0Tfq6D
— Daniel Boffey (@danielboffey) May 6, 2023
“போலீசார் ஏன் அவர்களை கைது செய்தார்கள் அல்லது அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் எங்களிடம் கூற மாட்டார்கள்” என்று ஒரு குடியரசு ஆர்வலர் டிராஃபல்கர் சதுக்கத்தில் AFP உடன் பேசும்போது கூறினார்.
ட்விட்டரில் வெளியான பதிவுகளின்படி, பொதுவெளியில் இடையூறு செய்ய முயன்ற நான்கு பேர் “பொது தொல்லைகளை ஏற்படுத்த சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில்” தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் “லாக்-ஆன் சாதனங்களையும் கைப்பற்றியுள்ளனர்” என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த கைதுகள் பற்றி விமர்சித்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், “நம்பமுடியாத அளவிற்கு ஆபத்தானது” என்று எச்சரித்துள்ளது. “இது போன்ற கைதுகள், மாஸ்கோவில் நடக்கலாம் லண்டனில் அல்ல” என்று UK மனித உரிமைகள் இயக்குனர் யாஸ்மின் அகமது ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
“அமைதியான போராட்டங்கள் தனிநபர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களை கவனமாக செயல்பட அனுமதிக்கின்றன – இங்கிலாந்து அரசாங்கம் தவறான பாதையில் செல்கிறது” என்று அகமது மேலும் கூறினார்.
பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து டிராஃபல்கர் சதுக்கம் வரையிலான ஊர்வலப் பாதையான தி மாலில் ஏராளமான ஆர்வலர்கள் காவல்துறையினரால் கைவிலங்கிடப்பட்டதைக் கண்டதாக AFP தெரிவித்துள்ளது. தி மால் மற்றும் டிராஃபல்கர் சதுக்கத்தில் ஒன்றுகூடியிருந்த ஏராளமான மற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனால் அதிருப்தி அடைந்தனர்.
“அவர்களின் நோக்கம் டி-ஷர்ட்கள் மற்றும் கொடிகளை காட்சிப்படுத்துவது மட்டுமே, அவர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. மக்களை தடுப்புக்காவலில் வைப்பது என்பது ஒரு பெரிய சர்வாதிகார அத்துமீறலாகும்,” மேலும் கைது செய்யப்பட்டவர்களில் எவரிடமும் “பசை, பெயிண்ட் அல்லது முடிசூட்டு விழாவை சீர்குலைக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவான ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ கூறுகிறது: .
“புதிய காவல் சட்டங்கள் நாம் இப்போது ஒரு டிஸ்டோபியன் கனவில் வாழ்கிறோம் என்று தெரிவிக்கிறதா? வட கொரியாவின் பியோங்யாங்கில் நீங்கள் இதை செய்தால் அது ஆச்சரியம் அளிக்காது. ஆனால், இது வெஸ்ட்மின்ஸ்டர், இந்த வெட்கக்கேடான செயல்பாடு” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் குழுவான ‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மன்னருக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இருக்க வேண்டும் என்று விரும்பும் மன்னராட்சி எதிர்ப்புக் குழு குடியரசு, அதன் எதிர்ப்புத் திட்டங்களைப் பற்றி குரல் கொடுத்து வருகிறது. இருப்பினும், AFP இன் படி, இந்த வார தொடக்கத்தில் குழுவின் தலைவர் ஸ்மித், அணிவகுப்பை சீர்குலைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.
டிரஃபல்கர் சதுக்கத்திற்கு அருகே ப்ளக்ஸ்கார்டு ஏந்திய ஆர்வலர்கள் சுமார் 20 போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக ரிபப்ளிக் இயக்குனர் ஹாரி ஸ்ட்ராட்டன் கூறுகிறார்.
“கிரஹாமும் எங்கள் தொண்டர்களும் காரணம் கேட்டார்கள், இந்த பிளக்ஸ் பேனர்களை எல்லாம் கைப்பற்றுகிறோம் என்று கூறி அவர்களை கைது செய்தனர் என்று ஹாரி ஸ்ட்ராட்டன் தெரிவித்தார். இவ்வாறாக பிரிட்டன் சரித்திரத்தில் 21ம் நூற்றாண்டு முடிசூட்டு விழா சில ஆர்ப்பாட்டங்களுடன் நிறைவுபெற்றது.