பெங்களூரு : ‘கர்நாடக தேர்தல் பணிகளுக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் பெறப்பட்டுள்ளன. எனவே இரண்டு நாட்கள், பஸ்களின் சேவையில் தொந்தரவு ஏற்படக்கூடும். இதை பொறுத்துக்கொள்ள வேண்டும்,’ என, கே.எஸ்.ஆர்.டி.சி., வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் பணிகளுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் 9 மற்றும் 10ல் பஸ்கள் தேர்தல் பணிக்கு செல்லும்.
கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் 8,100 பஸ்கள் உள்ளன. இவற்றில் 3,700 பஸ்கள் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளன. அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கு, ஊழியர்களை அழைத்து செல்லவும், ஓட்டுப்பதிவுக்கு தேவையான உபகரணங்களை கொண்டு செல்லவும், பஸ்கள் பயன்படுத்தப்படும்.
வரும் 9 மற்றும் 10ல், இரண்டு நாட்களும் பொது மக்களுக்கு பஸ்கள் சேவைகளில் தொந்தரவு ஏற்படலாம். இதை பொறுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement