சென்னை தமிழக அரசிடம் 15 வருடங்களைத் தாண்டி பயன்பாட்டில் இருக்கும் வாகன விவரங்களை அளிக்குமாறு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதைச் செயல்படுத்த அவகாசம் கோரி தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி, அரசு துறைகளில் உள்ள பழமையான வாகனங்களின் பயன்பாடு […]