சுட்ட கதைதான் கஸ்டடி.. ரொம்ப எதிர்பார்க்காதீங்க – என்ன வெங்கட் பிரபு இப்படி சொல்லிட்டாரு?

சென்னை: Venkat Prabhu on Custody (கஸ்டடி குறித்து வெங்கட் பிரபு) கஸ்டடி படத்தின் கதை குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருப்பது ட்ரெண்டாகியுள்ளது. அதனை கேட்ட ரசிகர்கள் என்ன இப்படி ஓபனா பேசிட்டாரு என ஜாலி கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு கோலிவுட்டில் பிரபலமான இயக்குநராக வலம் வருகிறார். அவர் இயக்கிய முதல் படமான சென்னை 600028 மெகா ஹிட்டடித்தது. முதல் படமே படு ஜாலியாக திரைக்கதையை நகர்த்தி சென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அவர். அதனையடுத்து அவர் இயக்கிய சரோஜா மெகா ஹிட்டானது. கோவா படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

வெங்கட் பிரபு ஆடிய மங்காத்தா: முதல் மூன்று படங்களில் கவனம் ஈர்த்ததன் மூலம் அவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அஜித்துடன் அவர் இணைந்து கொடுத்த மங்காத்தா படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறிப்பாக அஜித்தின் 50ஆவது அது அமைந்தது மட்டுமின்றி அவருக்கு ஒரு கம்பேக்காகவும் அமைந்தது. அந்தப் படத்திலும் வெங்கட் பிரபுவின் திரைக்கதை அசத்தலாக இருந்தது.

விழுந்து எழுந்த வெங்கட் பிரபு: மங்காத்தா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு வெங்கட்டின் இயக்கத்தில் வெளியான மாசு என்கிற மாசிலாமணி, பிரியாணி, சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன. இப்படிப்பட்ட சூழலில் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். டைம் லூப் கான்செப்ட்டை வைத்து உருவாக்கப்பட்டிருந்த அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. குறிப்பாக வெங்கட் பிரபு தனது திரைக்கதையில் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தார்.

வெஙக்ட் பிரபுவின் கஸ்டடி: இந்தச் சூழலில் நாக சைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு கஸ்டடி படத்தை இயக்கியிருக்கிறார். இது தமிழ் – தெலுங்கு என பைலிங்குவலில் உருவாவதோடு மட்டுமின்றி நாக சைதன்யாவுக்கு முதல் தமிழ் படமாகவும் கருதப்படுகிறது. கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க அரவிந்த் சாமி, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்: படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியானது. போலீஸ் சப்ஜெக்ட்டாக உருவாகியிருக்கும் கஸ்டடி 80களில் நடப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. பக்கா ஆக்‌ஷன் காட்சிகள், காதல் காட்சிகள் என ஜனரஞ்சகமாக உருவாகியிருக்கும் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.

Venkat Prabhu open Talk about Custody Movie Story

சுட்ட கதைதான்: இந்நிலையில் கஸ்டடி படத்தின் கதை குறித்து வெங்கட் பிரபு பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதுகுறித்து பேசிய அவர், “இளையராஜாவின் பெயர் எனது படத்தில் இருக்க வேண்டுமென்று விரும்பினேன். அது கஸ்டடி படத்தின் மூலம் நிறைவேறியிருக்கிறது. இந்தப் படத்தின் கதை வித்தியாசமான கதை என்றெல்லாம் சொல்லமாட்டேன். இது பாட்டி வடை சுட்ட கதைதான் என்றார்.

ஒரு இயக்குநர் தனது கதை குறித்து இப்படி வெளிப்படையாக பேசுவது அரிதிலும் அரிது. அந்த அரிதான லிஸ்ட்டில் வெங்கட் பிரபு சேர்ந்துவிட்டார். இப்படி சொல்வதற்கு தனது திரைக்கதை மேல் பெரிய நம்பிக்கை இருக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.