காந்திநகர், : ”காந்திநகர் மக்களின் வீட்டு பிள்ளை போன்று செயல்பட்டு வருவதால், என்னை கை விட மாட்டார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை,” என காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பெங்களூரு காந்திநகர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டுராவ் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று ஒரே நாளில் காட்டன்பேட், சுபாஷ்நகர் வார்டுகளில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட டிஸ்பென்சரி சாலை, எம்.ஜி.ரயில்வே காலனி, வி.எஸ்.டி. காலனி, அவுலம்மா சத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்காளர்களை சந்தித்து இதுவரை தான் செய்த வளர்ச்சி பணிகள் குறித்து தினேஷ் குண்டுராவ் விளக்கினார்.
வர் சென்ற இடம் எல்லாம் ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். ஏற்கனவே ஐந்து முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற செய்தது போன்று, இம்முறை வெற்றி பெற செய்யும்படி கேட்டுகொண்டார்.
பின், அவர் கூறியதாவது:
இதுவரை நான் போட்டியிட்ட தேர்தல்களில், எனக்கு காந்திநகர் தொகுதி மக்கள் ஆதரவு தந்தனர். இம்முறை அவர்களின் ஆதரவை, எனக்கு தான் தருவர்.
அவர்களின் வீட்டு பிள்ளை போன்று செயல்பட்டு வருவதால், என்னை கை விட மாட்டார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. தொகுதியில் 25 ஆண்டுகளாக வளர்ச்சி பணிகளை மேற்கொண்டவன் நான் என்பது மக்களுக்கு தெரியும்.
இம்முறை பா.ஜ., ஆட்சியால் காந்திநகர் தொகுதிக்கு வழங்கப்பட வேண்டிய நிதி குறைக்கப்பட்டது. இதனால் சில பணிகள் நிலுவையில் உள்ளன. அடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதி. அப்போது நிலுவையில் அனைத்து அடிப்படை பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்றும், நாளையும் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் திரளான ஆதரவாளர்களுடன் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement