வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்ட நபர்: இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர்


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் புகுந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு 8 பேர்களை கொன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிதாரி உட்பட 9 பேர்கள்

குறித்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில், அதில் மூவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்புடைய தாக்குதல்தாரியை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்ட நபர்: இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர் | Gunman Shooting Mall Outside Dallas @ruters

அந்த ஆயுததாரி வணிக வளாகத்தினுள் தமது வாகனத்தில் இருந்து வெளியேறி, உடனையே துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.
மூன்று டசினுக்கும் அதிகமான எண்ணிக்கையில் அந்த நபர் பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் துப்பாக்கிதாரி உட்பட 9 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
காயங்களுடன் தப்பிய 9 பேர்களில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளனர்.

வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்ட நபர்: இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர் | Gunman Shooting Mall Outside Dallas @PA

மூன்று பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர். எஞ்சிய நால்வர் ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்த 3.36 மணியளவில் ஆலன் நகர பொலிஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்துள்ளார்.

தாக்குதலில் இலக்கானவர்களில் சிறார்களும்

அவருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, அவர் தாக்குதல்தாரியை எதிர்கொண்டதுடன், சுட்டு வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கி தாக்குதலில் இலக்கானவர்களில் சிறார்களும் இருப்பதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

வணிக வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக சுட்ட நபர்: இரத்தவெள்ளத்தில் சரிந்த பலர் | Gunman Shooting Mall Outside Dallas @reuters

ஆலன் நகரப்பகுதியில் சுமார் 100,000 மக்கள் குடியிருந்து வருகின்றனர். 2023 பிறந்ததில் இருந்து இதுவரை 198 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.