3 பேருடன் ஹோட்டலுக்கு வந்த சிறுமி சடலமாக மீட்பு


களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலுக்கு இளைஞன் ஒருவருடன் வந்த 16 வயதுடைய சிறுமியின் நிர்வாண சடலம் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள ரயில் பாதையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிறுமி ஒருவரே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறுமியுடன் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இளைஞன் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

3 பேருடன் ஹோட்டலுக்கு வந்த சிறுமி சடலமாக மீட்பு | Girl Dies Near A Hotel Child Abuse In Sri Lanka

உயிரிழந்த சிறுமி மேலும் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களுடன் நேற்று மாலை ஐந்து மாடி ஹோட்டலுக்கு வந்து இரண்டு அறைகளை வாடகைக்கு கேட்டதாகவும், அவர்களுக்கு மூன்றாவது மாடியில் இரண்டு அறைகள் வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயதுடைய சிறுமியுடன் இருந்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி ஹோட்டல் குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.