பொதுவாகவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் ஒரு சில உணவுகளை உண்ண வேண்டும் என்று ஆய்வு கூறுகின்றது.
நமது உடலில் உள்ள பாகங்கள் அனைத்திற்கும் பசியெடுக்கும். அதையும் சீராக பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
இதயத்தை போன்றே நுரையீரலும். இதயத்தை கவனிக்கும் நாங்கள் நுரையீரலை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.
நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்வதற்கு நாம் பல விதமான உணவுகளை உண்ண வேண்டும். அதில் அனைத்தையும் உண்ண கூடாது. ஒரு சில உணவுளை மாத்திரமே உண்ண வேண்டும்.
அவ்வாறு எந்த உணவுகளை உண்டால் நுரையீரலை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்வோம்.
முட்டைக்கோஸ்
- இதில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளது. ஆகவே இது நுரையீரல் நோயில் இருந்து பாதுகாக்கும்.
கீரை
-
கீரை வைட்டமின் சி இன் சிறந்த உதாரணமாகும். இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
ப்ரோக்கோலி
- இதில் அதிக அளவு வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகள் உள்ளன.
ப்ரோக்கோலி சாப்பிடுவதால் நுரையீரல் புற்றுநோயில் இருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
பூண்டு
- பூண்டில் ஏராளமான சத்துக்களின் கலவைகள் உள்ளன, அவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கின்றன.
- பூண்டை தொடர்ந்து உட்கொள்வது சுவாச நோய்த்தொற்றுகளில் இருந்து விடுப்படலாம்.
மஞ்சள்
- மஞ்சள் சாப்பிடுவது நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.
இஞ்சி
- உணவில் இஞ்சியைச் சேர்ப்பது சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து நுரையீரல் செயல்பாட்டை சீராக வைத்திருக்கும்.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில குறிப்புகள்
- புகைப்பிடித்தால் சுவாச நோய் எற்படும்.
- வழக்கமான உடற்பயிற்சியை செய்து வந்தால் சுவாசத்தை மேம்படுத்தலாம்.
-
அதிக காற்று மாசுபாடு உள்ள காலங்களில் வெளியில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
-
காய்ச்சல், நிமோனியா மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக தடுப்பூசி போடுவது பற்றி உங்கள் சுகாதார வழங்குநரிடம் அறிவுரை பெற வேண்டும்.