வருமான வரித்துறை சோதனை: ரூ.20 கோடி நகை, பணம் சிக்கியது| Income Tax Department raid: Rs 20 crore jewels, cash seized

பெங்களூரு, : வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு, மைசூரில் நடத்திய சோதனையில், இருபது கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகைகள் சிக்கின.

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்க, நிதி நிறுவன அதிபர்கள் சிலர் தங்கள் வீடு, அலுவலகங்களில் பணம், நகைகளை வைத்திருப்பதாக, வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் பெங்களூரு சாந்திநகர், காக்ஸ்டவுன், சிவாஜிநகர், ஆர்.எம்.வி., விரிவாக்கம், கன்னிங்ஹாம் ரோடு, சதாசிவநகர், குமாரபார்க், பேர்பீல்டு லே – அவுட் ஆகிய பகுதிகளிலும், மைசூரில் சில இடங்களிலும் கடந்த இரு நாட்களாக, வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, நிதி நிறுவன அதிபர்கள் 15 பேரின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து, உரிய ஆவணங்கள் இல்லாத 15 கோடி ரூபாய் ரொக்கம், ஐந்து கோடி ரூபாய், தங்க நகைகள் சிக்கின.

இதை வருமான வரித்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். தொழில் விஷயமாக வைத்திருப்பதாக, நிதி நிறுவன அதிபர்கள் தெரிவித்தனர். ஆனாலும் உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு, பணம், நகைகளை பெற்று கொள்ளும்படி, வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.