முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு சென்றுள்ளார்.
பசில் ராஜபக்சவும் அவரது மனைவியும் இன்று(07.05.2023) காலை புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.
எமிரேட்ஸுக்கு சொந்தமான EK-649 என்ற விமானத்தில் அதிகாலை 03.15 மணியளவில் இருவரும் துபாய்க்கு புறப்பட்டுள்ளனர்.