பிடிஆர்: ‘ நீங்க மட்டும் இல்லன்னா’.. அமைச்சர் சொன்ன செய்தி.. மனம் குளிர்ந்த தலைமை.?

ஆட்சி பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ளன. இது குறித்து முதல்வர்

தனது ட்விட்டர் பதிவில், ‘‘ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

2 வருட திமுக ஆட்சி; கிழித்தெடுத்த ஆர்.பி.உதயகுமார்!

நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்’’ என்று வாழ்த்தியுள்ளார்.

அதேபோல் திமுகவின் ஈராண்டு சாதனைகள் குறித்த பொதுக்கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் 1,222 இடங்களில் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.‘‘நம்மை நம்பி தமிழ்நாட்டை ஒப்படைத்த மக்களுக்கு நாம் செய்திருக்கும் பணிகளை – திட்டங்களை- சாதனைகளை அவர்களின் இதயத்தில் பதித்திடுவோம். உங்களது பேச்சுகளில் கண்ணியம் குன்றிடாமல் கருத்துகளை மக்களிடம் முன்வையுங்கள்.

திராவிட மாடல் அரசின் சமூக நலத் திட்டங்களை இழிவாகப் பேசியவர்கள், இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக Formula!

இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி தொடரும்; அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் நீடிக்கும்! திராவிட மாடல் அரசின் நல்லாட்சிக்கான நற்சான்றிதழைத் தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வழங்கிடும் வகையில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் வரலாறு படைக்கட்டும்!’’ என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் ஆடியோ விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் பிடிஆர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் குடும்பத்திற்கு பிடிஆர் மேல் கோபம், அமைச்சரவை பட்டியல் மாற்றத்தின் போது தூக்கியடிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.

இது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் சமூகநீதி அரசு மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், அவர்தம் அமைச்சரவையில் பணியாற்றும் வாய்ப்பை என் வாழ்வில் கிடைத்த மகத்தான வெகுமதியாகவும், மன நிறைவளிக்கும் அனுபவமாகவும் எண்ணுகிறேன்.

இந்த ஆட்சி அடைந்துள்ள வெற்றிகளை எடுத்துரைத்தாலும், இத்தருணத்தில் எனது தலைவருக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், உன்னதமான சமத்துவ சமூகத்தைப் படைக்க வேண்டும் என்கிற எங்கள் கழகத்தின் லட்சியம் முதல்வரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்தின் மூலமே செயல் வடிவம் பெறுகிறது’’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.