ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சகா நான்கு பக்கமும் சுழற்றி, சுழற்றி அடித்தார். மறுபக்கம் ஷுப்மன் கில்லும் லக்னோ அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
இதில், விருத்திமான் சாக 43 பந்துகளில், நான்கு சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 86 ரன்கள் சேர்த்து தனது ஆட்டம் இழந்தார். முதல் விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்ந்தது.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில் 94 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரி அடித்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ரன்களை சேர்ந்தது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி 20 ஓவர்களில், 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து.
இதன் மூலம் குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற முதல் அணி என்ற பெருமையையும் குஜராத் அணி பெற்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு பாயிண்ட் டேபிளை காண்க :