சென்னை : நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் பீட்டர் பாலின் இறப்புக்கு காரணம் இதுதான் என சினிமா பிரபலம் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கிராபிக்ஸ் டிசைனரான பீட்டர் பாலை கடந்த 2020ம் ஆண்டு நடிகை வனிதா கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
பீட்டர் பால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே வனிதா திருமணம் செய்து கொண்டதால், பல பிரச்சனைகள் எழுந்தன அனைத்தையும் ஒற்றை ஆளாக சமாளித்தார் வனிதா.
உயிரிழந்தார் : இருவரும் இளம் ஜோடி போல இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், திடீரென பீட்டர் பாலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டடை அடுத்து அவரை விட்டு பிரிவதாக வீடியோ வெளியிட்டுவிட்டு பிரிந்தார். இதையடுத்து வெள்ளிக்கிழமை பீட்டர் பால் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
திருமணமே ஆகவில்லை : வனிதாவின் மூன்றாவது கணவர் உயிரிழந்த செய்தி இணையத்தில் வெளியானதை அடுத்து, வனிதா, தனது ட்விட்டர் பக்கத்தில் பீட்டர் பாலுக்கும் தனக்கும் திருமணமே ஆகவில்லை என்றும். சட்டப்படி பீட்டர் பால் என் கணவரும் இல்லை. நான் அவருக்கு மனைவியும் இல்லை. நான் எப்போதுமே சிங்கிள் உமன் தான் என கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
வனிதா பிரபலமானார் : இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. வனிதா சொந்தமாக ஒரு மெடிக்கல் ஷாப்பும், இரண்டு துணிக்கடையும் வைத்து இருக்கிறார். மேலும், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் வைத்து இருக்கிறார்.
பிரிந்து விட்டனர் : இந்த சேனலை யார் கவனித்து கொள்வார் என்று யோசித்த போதுதான் பீட்டர் பால் நான் கவனித்துக் கொள்கிறேன் என்று வந்தார். அப்போதுதான் வனிதாவுக்கும் பீட்டர் பாலுக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால், பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்கு அரசியல் செல்வாக்கு இருந்ததால், தொடர்ந்து வந்த பிரச்சனையால் பீட்டர் பாலை ஒதுக்கிவிட்டார்.
கல்லீரல் செயலிழந்துவிட்டது : அதுமட்டுமில்லாமல் 24 மணிநேரமும் மது அருந்திக்கொண்டே இருக்கக்கூடியவர் பீட்டர் பால், அவர் உடம்பில் ரத்தத்தைவிட அதிக மதுதான் ஓடும் அந்த அளவுக்கு அவர் சரக்கு பார்ட்டியாக இருந்ததால், கல்லீரல் சுத்தமாக செயலிழந்து விட்டது. மாற்று கல்லீரலுக்கு கோடி கணக்கில் செலவு ஆகும் என்பதால் போனால் போகட்டும் போடா என்ற மனநிலைக்கு பீட்டர் பால் வந்துவிட்டார். இவர் இறப்புக்கு முழுக்க முழுக்க காரணம் தண்ணிதான்.
புரட்சிப்பெண் : பீட்டர் பால் தனது கணவரே இல்லை என்று வனிதா சொன்னாலும், பழகியதற்காவது அவருடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால், அதைப்பற்றி கவலையை படாமல் தனது வாழ்க்கையை ஜாலியாக வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார் வனிதா, இவர் நிச்சயம் புரட்சிப்பெண் என்று தான் சொல்ல வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்த்த நெட்டிசன்களும் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.