மர்மமாக உயிரிழந்த மாணவி தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்



 களுத்துறை நகரில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவி மேலும் மூவருடன் தற்காலிக தங்குமிடத்திற்குள் நுழைந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

குறித்த சிறுமி நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு மேலும் இரு இளைஞர்கள் மற்றும் சிறுமி ஒருவருடன் வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த குழுவினர் நேற்று மாலை 6.30 மணியளவில் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்கள் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும், நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை ஹோட்டல் ஊழியர் ஒருவர் அவதானித்துள்ளார்.

பின்னர், ஒரு இளம் பெண்ணும் ஒரு இளைஞனும் ஹோட்டலை விட்டு வெளியேறினர். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, மற்ற இளைஞனும் அதிர்ச்சியடைந்த நிலையில் ஹோட்டலை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் அவதானித்துள்ளனர்.

அப்போது ஹோட்டலுக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் ஹோட்டலுக்கு அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்ட போது குறித்த சிறுமி ஏற்கனவே உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.