வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: பாக்., விமானம் ஒன்று இந்திய வான் எல்லையில் 120 கி.மீ தூரம் வரையில் சுமார் 10 நிமிடங்கள் வரையில் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது
இது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 4ம் தேதி மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட பாக்., இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அதனுடைய பயணத்திட்டத்தின்படி லாகூர் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டும். ஆனால் கனமழை காரணமாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் அறிவுறுத்தல் படி வேறு இடம் நோக்கி சென்றார். சிறிது நேரத்தில் கனமழை குறைந்து விமான நிலையத்திற்கு வரவேண்டியபாதையை விமானி தவறவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த விமானம் சுமார் 13,00 அடி உயரத்தில் பறந்தபடி இந்தியாவின் பஞ்சாப் மாநில பகுதியான தரன்சாஹிப் மற்றும் ரசூல்பூர் நகரங்களை கடந்துள்ளது .விமானி சுதாகரித்து விமானத்தின் உயரத்தை 20,ஆயிரம் அடி உயரத்திற்கு உயர்த்தினார். தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் ஜூகியன்நூர் முஹம்மது கிராமம் வழியாக பாகிஸ்தானிற்குள் விமானத்தை விமானி இயக்கி உள்ளார். தொடர்ந்து பாக்., கின் பஞ்சாப் மாநிலத்தில் கசூர் கிராமத்தின் மேல் பறந்த விமானம் மீண்டும் இந்திய எல்லைக்குள்நுழைந்தது. இந்தியாவின் பஞ்சாப் பகுதியான லக்காசிங்வாலா, ஹிதர் கிராமவான்வெளியில் பறந்தது. அப்போது விமானம் 23, ஆயிரம் அடி உயரத்தில் சுமார் 320 கி.மீ வேகத்தில் பறந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறாக இந்தியாவின் வான்வெளியில் மொத்தம் 120 கி.மீ தூரம் வரையில் சுமார் 10 நிமிடங்கள் வரை பயணித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement