Dhanush: தனுஷுக்காக வேற லெவல் கதையை தேர்வு செய்த வெற்றிமாறன்: தேசிய விருது கன்ஃபர்ம்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பொல்லாதவன் படம் மூலம் இயக்குநர் ஆனவர் வெற்றிமாறன். தனுஷ் ஹீரோவாக நடித்த பொல்லாதவன் படம் சூப்பர் ஹிட்டானது. முதல் படத்திலேயே ரசிகர்களின் பாராட்டை பெற்றார் வெற்றிமாறன்.

மேடையில் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா!
தன் இரண்டாவது படமான ஆடுகளத்திலும் தனுஷையே ஹீரோவாக நடிக்கை வைத்தார். தனுஷ், வெற்றிமாறன் கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி ஆகும்.

பொல்லாதவன், ஆடுகளத்தை அடுத்து தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வட சென்னை, அசுரன் ஆகிய படங்களும் ஹிட்டாகின. இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார் தனுஷ். அது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

வட சென்னை 2 எப்பொழுது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் அது நடக்கவிருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு நல்ல விஷயத்தை தெரிவித்துள்ளார்.

தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படம் கே.ஜி.எஃப். கதை களத்தை மையமாக கொண்டதாக இருக்கும். அதற்கான விபரங்களை சேகரித்து வருகிறார் வெற்றிமாறன் என்றார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கே.ஜி.எப். கதை களம் என்றால் படம் கண்டிப்பாக வேற லெவலில் தான் இருக்கும். அதனால் இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். அதற்காக தாடி மீசை எல்லாம் வளர்த்து ஆளே மாறிவிட்டார். கேப்டன் மில்லரை அடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதன் பிறகு டி50 படத்தை இயக்கி, நடிக்கவிருக்கிறார் தனுஷ்.

இதற்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் தன் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். கர்ணனை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ்.

Vikram:வீடு தேடி வந்த ரசிகர்: மெய் சிலிர்க்க வைத்த சீயான் விக்ரம்

தனுஷை போன்றே வெற்றிமாறனும் தன் படங்களில் பிசியாக இருந்து வருகிறார். சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை இயக்கி வெளியிட்டார் வெற்றிமாறன். அதன் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங் துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.

படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்து வருகிறது. விடுதலை 2 படப்பிடிப்பை வெற்றிமாறனின் உதவியாளர்கள் நடத்தி வருகிறார்கள்.

சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதன் வி.எஃப்.எக்ஸ் வேலையில் பிசியாக இருந்து வருகிறாராம். சூர்யாவின் வாடிவாசல் படம் மீது தற்போதே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

இதற்கிடையே விடுதலை 2 படபப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஜெயமோகனின் துணைவன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் விடுதலை. சூரி முதல் முறையாக ஹீரோவாக நடித்த விடுதலை படத்தில் அவருக்கு ஜோடியாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரின் சகோதரி பவானி ஸ்ரீ நடித்தார். இளையராஜா இசையமைத்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

படம் பார்த்த அனைவரும் சூரி, பவானி ஸ்ரீயின் நடிப்பை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.