முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது? – மக்கள் கருத்து!
கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக சமீபத்தில் வெளியான மத்திய தணிக்கை அறிக்கை வெளிச்சம் காட்டிவிட்டது. இதை
அமைச்சர்கள் கையெலுடுத்து பேச தொடங்கிவிட்டனர். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கீழ் இருந்த நெடுஞ்சாலைத் துறையில், துறை அதிகாரிகளின் கணினியில் இருந்தே ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, சில நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் ஒதுக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதேபோல் பள்ளிக்கல்வித்துறையிலும் லேப்டாப் வீணடிப்பு, மாணவர்களுக்கு காலனிகளை வழங்காதது உள்ளிட்ட பல தேவையில்லாத செலவினங்களும் பொது வெளியில் வந்துள்ளது.
இந்தநிலையில், அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு, இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து டிடிவி தினரகரணும் கண்டனம் தெரிவித்தார். இந்தசூழலில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய புள்ளிகள் இன்னும் கொள்ளையடிப்பதை திமுக அரசு அனுமதிப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளக்து.
இது குறித்து அறப்போர் இயக்கம் அமைப்பு தனது ட்விட்டர் பதிவில், ‘‘சென்னையில் 400 பேருந்து நிறுத்தங்கள் கட்ட 2015 ம் வருடம் போடப்பட்ட டெண்டர். இந்த டெண்டருக்கு விண்ணப்பித்தது 3 நிறுவனங்கள். வெற்றி பெற்றதும் இந்த மூன்று நிறுவனங்கள் தான். இந்த மூன்று நிறுவனங்களுக்கும் ஒரே முதலாளி குழு, மற்றும் ஒரே நுங்கம்பாக்கம் முகவரி. டெண்டர் எடுப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்பு தான் இந்த மூன்று நிறுவனங்களும் துவங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களின் முதலாளிகளில் ஒருவர் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகரின் சகோதரர் செந்தில் பிரபுராஜன். மற்ற இருவரும் சகோதரர்கள்.
பேருந்து நிறுத்தத்தை கட்டும் இந்த நிறுவனங்களுக்கு அந்த பேருந்து நிறுத்தத்தில் அடுத்த 15 வருடங்களுக்கு விளம்பரம் செய்து சம்பாதித்துக்கொள்ள அனுமதி கொடுக்கப்படுகிறது. ஒரு பேருந்து நிறுத்தம் கட்ட மாநகராட்சி நிர்ணயித்த தொகை 12 லட்சம். ஒவ்வொரு வருடமும் பேருந்து நிறுத்த பராமரிப்பு செலவு போக வருட லாபம் 8.08 லட்சம். 15 வருடத்திற்கு 400 பேருந்து நிறுத்தங்களுக்கும் லாபம் 485 கோடி. ஆனால் அதை கட்டிய செலவு வெறும் 48 கோடி.
இந்த பேருந்து நிறுத்தங்களை கட்டுவதற்கு செலவு செய்ய இந்த நிறுவனங்கள் கருப்பு பணத்தை எவ்வாறு பயன்படுத்தி உள்ளார்கள் என்ற ஆதாரத்தையும் அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளது. இந்த 48 கோடியை சென்னை மாநகராட்சியே செலவு செய்து பேருந்து நிறுத்தங்களை கட்டியிருந்தால் விளம்பர லாபம் மாநகராட்சிக்கு வந்து கொண்டு இருக்கும். ஆனால் தற்பொழுது டெண்டர்களை செட்டிங் செய்து எடுத்த வேலுமணியின் கூட்டாளிகளுக்கு சென்று கொண்டு இருக்கிறறது. இந்த கொள்ளையை திமுக அரசு தடுக்கவும் இல்லை. இந்த கொள்ளையர்கள் மீது வழக்கு பதியவும் இல்லை’’ என்று காட்டமாக தெரிவித்துள்ளது.