லியோ : பிரம்மாண்டமாக தயாராகி வரும் லியோ படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளதால், காஷ்மீரில் லியோ படத்தின் முதல் ஷெட்யூல் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்ட நாட்களுக்கு முன்பாகவே படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் படப்பிடிப்பு நிறைவு : லியோ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு 10 முதல் 15 நாட்கள் சென்னையில் நடக்கும் எனவும், அதன் ஹைதராபாத்தில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் மே மாதம் நிறைவடையும் என கூறப்படுகிறது.
மலையாள நடிகை : இந்நிலையில் லியோ படத்தில் மலையாள நடிகை சாந்திமாயாதேவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவர், மோகன் லால் நடித்த த்ரிஷ்யம் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
மலையாள ரசிகர்களை கவர : லியோ படத்தில் ஏற்கனவே பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இணைந்துள்ள நிலையில், விஜய்யின் மலையாள ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மலையாள நடிகர்களை லோகேஷ் கனகராஜ் படத்தில் கமிட் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.