பிரித்தானிய இளவரர் ஹரி மன்னருக்கு முடிசூட்டப்பட்ட சில மணிநேரங்களில் அமெரிக்காவிற்கு திரும்பியதால் சார்லஸ் ஏமாற்றமடைந்தார்.
அமெரிக்காவுக்கு திரும்பிய ஹரி
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மன்னர் சார்லஸுக்கு முடிசூட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சார்லஸ் மற்றும் கமிலா இருவரும் பால்கனியில் தோன்றி, மக்களிடம் வாழ்த்துக்களை பெற்றனர்.
இதில் கலந்துகொண்ட இளவரசர் ஹரிக்கு குடும்பத்தின் மதிய உணவில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அவர் தனது மகன் ஆர்ச்சியின் பிறந்தநாளை கொண்டாட அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி, மன்னர் சார்லஸுக்கு முடிசூட்டப்பட்ட சில மணிநேரங்களில் ஹரி அமெரிக்காவுக்கு திரும்பினார்.
ஏமாற்றமடைந்த மன்னர்
இதனால் மன்னர் சார்லஸ் ஏமாற்றமடைந்ததாக ஆதாரம் தெரிவித்துள்ளது. எனினும் தனது பேரனுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அரச குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சில நட்சத்திர கலைஞர்களுக்காக வின்ட்சர் கோட்டையில் இன்றிரவு நடைபெறும் ஒரு VIP பார்ட்டியில் மன்னரும், ராணியும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் முடிசூட்டு விழாவின் இரண்டாவது நாளான இன்று கச்சேரிகள், விருந்துகள் என பிரித்தானிய மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட உள்ளனர்.