இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம், ஞானவேல் படம் என செம பிசியாக வலம் வருகின்றார். 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு ரஜினி ஒரே சமயத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால் தற்போது அடுத்தடுத்து படங்களில் செம பிசியாக நடித்து வருகின்றார் ரஜினி. மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருப்பது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக இருக்கின்றது.
ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் உருவாகும் லால் சலாம் என்ற படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகின்றார். மேலும் லால் சலாம் படத்தில் ரஜினி இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
Rajini: என் நம்பிக்கை வீண்போகவில்லை..உச்சகட்ட மகிழ்ச்சியில் ரஜினி..காரணம் இதுதானாம்..!
இதன் மூலம் பாட்ஷா படத்திற்கு பிறகு ரஜினி முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இதையடுத்து ரஜினி ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேலின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இவ்வாறு ரஜினி வித்யாசமான முயற்சியில் சமீபகாமலாக செயல்பட்டு வருவது ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் ரஜினி தன் 171 ஆவது திரைப்படத்திற்காக லோகேஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என்ற செய்தி மிகப்பெரிய ஹைப்பை உண்டாக்கியுள்ளது. தற்போது லோகேஷ் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துவிட்டு கார்த்தியின் கைதி 2 படத்தையும் இயக்கவுள்ளார் இப்படங்களை தொடர்ந்து லோகேஷ் ரஜினியுடன் இணைவார் என தெரிகின்றது
சமீபத்தில் கூட இவர்கள் இணையும் படத்திற்கான போட்டோஷூட் நடைபெற்றதாக தகவல்கள் வந்தன. இந்நிலையில் தலைவர் 171 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் அல்லது லலித் ஆகியோரில் ஒருவர் தான் தயாரிப்பார்கள் என பேசப்பட்டு வந்தது. குறிப்பாக லோகேஷிற்கு தயாரிப்பாளர் லலித் நெருக்கமானவர் என்பதால் அவர்தான் தலைவர் 171 படத்தை தயாரிப்பார் என உறுதியாக சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது வந்த தகவலின் படி லோகேஷ் மற்றும் ரஜினி இணையும் படத்தை புகழ்பெற்ற நிறுவனமான ஏவிஎம் ஸ்டூடியோ தயாரிப்பதாக ஒரு தகவல் பரவி வருகின்றன. ரஜினிக்கு ஆரம்பகாலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து அவரை ஒரு சூப்பர்ஸ்டாராக உயர்த்தியதால் பெரும் பங்கு ஏவிஎம் நிறுவனத்திற்கு உண்டு.
எனவே தன்னை ஆரம்பகாலகட்டத்தில் உயர்த்திய ஏவிஎம் நிறுவனம் தற்போது படங்களை தயாரிக்காமல் இருந்து வருவதால் அந்நிறுவனத்திற்காக ஒரு படம் பண்ண ரஜினி முடிவெடுத்துள்ளாராம். எனவே தலைவர் 171 படத்தை ஏவிஎம் நிறுவனத்தை தயாரிக்குமாறு ரஜினி கேட்டுக்கொண்டுள்ளார் என ஒரு தகவல் வருகின்றன. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை.