சூப்பர் சிங்கரின் 6 ஆவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரக்ஷிதா சுரேஷ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் அகநக தெலுங்கு வெர்ஷன், வீர ராஜ வீரா பாடலின் கன்னட வெர்ஷன் உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இந்நிலையில், மலேசியா விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ரக்ஷிதா பயணித்த கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் இன்ஸ்டாகிராம் மூலம் தெரிவித்தார்.