போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி முற்றுகை!

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை இன்று அதிகாலையில் முற்றுகையிட்டனர்.

அவர்களை டெல்லியில் நுழைய விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்துத் தடுத்து வருகின்றனர். இன்று மேலும் பல ஆயிரம் பேர் திரள்வார்கள் என்று கூறப்படுகிறது.

பாஜக பிரமுகரும் மல்யுத்தக் கழகத்தின் தலைவருமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார் தொடுத்துள்ள மல்யுத்த வீராங்கனைகள் அவர் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

போராட்டத்துக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கம், மகளிர் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து அண்டை மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.