இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பிசிரஜினி தற்போது தான் நெல்சனின் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினியின் போர்ஷன் கடந்த மாதமே முடிந்துவிட்டதாகவும், தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல் வருகின்றது. இதைத்தொடர்ந்து ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடிக்க இருக்கின்றார். இன்னும் சில தினங்களில் மும்பையில் நடக்கவுள்ள லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கின்றார் ரஜினி. இந்நிலையில் லால் சலாம் படத்தை அடுத்து ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேலின் இயக்கத்தில் ஒரு படத்திலும், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஒரு படத்திலும் ரஜினி நடிக்கவுள்ளார். இவ்வாறு ரஜினி பிசியாக ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்க இருக்கின்றார்
திருப்திநெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி இப்படத்தின் மீதுஅதித நம்பிக்கை வைத்துள்ளாராம். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மோகன் லால், ஷிவ்ராஜ்குமார், ஜாக்கி ஷாரூப் ஆகியோர் நடித்து வரும் இப்படம் ஒரு பான் இந்திய படமாக உருவாகி வருகின்றது . சமீபத்தில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என ஒரு டீசரின் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயிலர் திரைப்படத்தை போட்டு பார்த்த ரஜினி முழு திருப்தியுடன் இருக்கிறாராம். தன்னை ஜெயிலர் திரைப்படம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையில் ரஜினி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது
முடிவுசமீபகாலமாக ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் தற்போது தொடர் வெற்றிகளை குவிக்க ரஜினி முடிவெடுத்துள்ளாராம். அதன் காரணமாகவே ஒரே சமயத்தில் பல படங்களில் ரஜினி நடிக்க கமிட்டாகி வருகின்றார். அதுவும் கமர்ஷியல் படமாக இல்லாமல் சற்று வித்யாசமான பாணியில் படங்களை உருவாக்கும் இயக்குனர்களின் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அதன் படி நெல்சன், ஞானவேல், லோகேஷ் கனகராஜ் என வித்யாசமான படங்களை இயக்கும் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கின்றார் ரஜினி. எனவே இப்படங்களின் மூலம் தொடர் வெற்றிகளை குவிப்பதே ரஜினியின் குறிக்கோளாக இருக்கின்றது
கண்டிஷன்இந்நிலையில் லால் சலாம் படத்தில் நடிப்பதற்காக ரஜினி ஐஸ்வர்யாவிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நாயகர்களாக நடிக்க ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். இதையடுத்து இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடிக்கவுள்ளது. இதில் ரஜினி கலந்துகொள்ள இருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் ரஜினி ஐஸ்வர்யாவிடம், ஞானவேலின் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ள படம் துவங்கும் முன்பே லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிடுமாறு கண்டிஷன் போட்டுள்ளாராம். இந்த கண்டிஷனுக்கு ஓகே சொன்ன ஐஸ்வர்யா ரஜினியின் போர்ஷனை விறுவிறுப்பாக நடத்தி முடிக்க திட்டம் போட்டு வருகின்றார். இதையடுத்து ரஜினி மற்றும் ஞானவேல் இணையும் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது