பி.யூ.கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

உப்பள்ளி-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா எத்தனாலா கிராமத்தில் மஞ்சுநாத் தொட்டமணி (வயது 17) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பி.யூ. கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு கொண்டார். அவரை, அவருடைய குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சுநாத் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி உப்பள்ளி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தனக்கு அதிநவீன செல்போன் வாங்கித்தரக் கோரி பெற்றோரிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர்கள் செல்போனை வாங்கித்தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.